, ,

இமயமலையின் உருவாக்கம்


இமயமலையின் உருவாக்கம்

இமயமலை இளம் மடிப்பு மலைகளாக அறியப்படுகின்றது.அமெரிக்காவில் உள்ள அப்பலாசியன் போன்ற பழைய மலைத்தொடர்களுடன் ஒப்பிடும்போது இவை புவியின் வரலாற்றில் அண்மையில் உருவானவையாகும்.

இமயமலை உருவாக்கம் தொடர்பான கொள்கை 1912 களில் அல்பிரட் வேக்னரின் கண்டநகர்வு கொள்கையின் விருத்தியுடன் ஆரம்பமானது.இவரின் கருத்துப்படி பூமியானது பாரிய தகடுகளினால் இணைக்கப்பட்டுள்ளது. இது தகட்டோட்டுக் கொள்கை என அழைக்கப்படுகின்றது. இன்றைய கண்டங்கள் யாவும் ஒரே நிலத் திணிவிலிருந்தே உருவானனவையாகும். இந்நிலத்திணிவு ‘பஞ்சியா’ என அழைக்கப்பட்டது. இது பாரிய சமுத்திரத்தினால் சூழப்பட்டிருந்தது. இந்நிலத் திணிவிலிருந்தே இன்றைய கண்டங்கள் ஒன்றிலிருந்து ஒன்று விலகியும் ஒருங்கியும் இன்றைய நிலையை அடைந்தன.

மத்திய ப்ரிமியன் யுகத்தில் அதாவது 200 மில்லியன் வருடங்களுக்கு முன்பு இந்நிலத்திணிவானது இரு பகுதிகளாகக் காணப்பட்டது. இதில் யுரேசியன் வடநிலத்திணிவானது லோரேசிய எனவும், தென்னிந்திய நிலத்திணிவுகள் கொண்டுவானாலாந்து எனவும் அழைக்கப்பட்டது. இவ்விரு நிலத் திணிவுகளும் தெத்தீஸ் எனப்பட்ட நீர் பரப்பினால் பிரிக்கப்பட்டுக் காணப்பட்டது. இக்காலப்பகுதியில் பஞ்சியா நிலத்திணிவானது வேறுபட்ட நிலத்திணிவுகளாக நழுவி வேறுபட்ட திசைகளில் நகரத்தொடங்கியது.

இதன் காரணமாக இவ்விரு நிலத்ணிவுகளினால் ஆழம் குறைந்த தெத்தீஸ் கடற்பரப்பினுள் பாரியளவிலான அடையல்கள் படியத்தொடங்கின. யுரேசியன் மற்றும் இந்தியன் நிலத்திணிவுகள் ஒன்றை ஒன்று நெருக்கமாக அண்மிக்கத் தொடங்கின. இந்தியத் தகடானது வருடத்திற்கு 16cm என்ற அளவில் நகர்ந்து கொண்டிருந்தது.


ஆரம்பகட்ட மலையாக்க செயன்முறைகள்லானது 70 மில்லியன் வருடங்களுக்கு முன்பு ஆரம்பமானது. இக்கால கட்டத்தில் இரு நிலத் திணிவுகளும் மோதி வீழ்ச்சிக்கு உள்ளாகத் தொடங்கின. இந்தியத் தகடானது யுரேசியன் தகட்டுடன் மோதி முரிவுக்குல்லானது. இதன் விளைவால் ஆழம் குறைந்த கடற்பரப்பானது வேகமாக மடிப்புக்கள் மடிப்புக்களாக உயரத் தொடங்கியது. இதன் பின்னர் 65 மில்லியன் வருடங்களுக்கு முன்பு மலையாக்கத்தின் இரண்டாவது கட்டம் ஆரம்பமானது. தெத்தீஸ் கடற் படுக்கையானது மீண்டும் உயரத் தொடங்கியது.

அடுத்து வந்த 25 மில்லியன் வருடங்களுக்கு முன்பு, அடுத்த மலையாக்கக் கட்டம் தோற்றம் பெற்றது. இதன் பின்னர் குறிப்பிட்ட காலங்களில் மலையாக்க நிலைகள் தோன்றின. யுரேசியன் தகடுகளுக்கு எதிரான இந்தியத் தகடுகளில் தள்ளுகையினால் இமய மலைச் சிகரங்கள் உயர்ந்து கொண்டு வந்தன. இறுதியான பிரதான மலையாக்க நிலையானது 600,000 வருடங்களுக்கு முன்பு தோற்றம் பெற்றது.

இமயமலையின் இயக்கம் 

இமயமலையின் மேல் எழுச்சி கடந்த நிலையிலும் மிகக் குறைந்த அளவில் இன்னும் உயர்ந்து கொண்டிருக்கின்றது. இந்தியக் கண்டமானது ஒவ்வொரு வருடமும் 2cm என்ற அளவில் தொடர்ச்சியாக வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. இதன் காரணமாக இமயமலை ஆனது ஒவ்வொரு வருடமும் 5mm என்ற அளவில் உயர்ந்து கொண்டிருக்கின்றது. இது இமயமலை ஆனது இன்னும் செயற்பாடுடையதாகவும் நிலையற்ற கட்டமைப்பை கொண்டுள்ளதையும் குறிக்கின்றது.


இமயமலையின் கீழுள்ள புவியோடானது 60-780 km தடிப்பினைக் கொண்டதாகக் காணப்படுகின்றது. இது மலைகளுக்கு முக்கியமான செயன்முறையாக அமைகின்ற ‘புவியோட்டு அடித்தளத்தை’ (Crustal root) உருவாக்குகின்றது. ஏனெனில் மிதக்கின்ற அடித்தளமானது மலையின் உயர் அடைகைக்கு காரணமாக அமைகின்றது.

இமயமலையின் பாரிய திணிவானது கீழமைந்துள்ள புவியோட்டு அடித்தளத்தினால் தாங்கப்படுகின்றது. இப்பாறையானது மான்ரில் படையினுள் அழுத்தப்படுமானால், அது உருகத் தொடங்குவதுடன் மெதுவாக பாயவும் ஆரம்பிக்கும். இது மலையின் கீழ் இறங்குகைக்கு காரணமாக அமையும். ஆயினும் புவியீர்ப்பு நிலையங்களின் அவதானிப்புக்களின் படி, உப-இமய மலை வலயமானது குறை நிரப்பு செயன் முறைகளுக்கு உள்ளாகும் பிரதேசமாகக் காணப்படுவதோடு, அளவுக்கு மீறிய சுமையைக் கொண்டுள்ளதாகவும் காணப்படுகின்றது. இமய மலையின் உட்பகுதிகளில் அதாவது மலையின் விளிம்பிலிருந்து 140 மைல்கள் இச்சுமை காணமல் போயுள்ளது. இவ்வேறுபாடுகள் இடவிளக்கற் தன்மையையும் தரைக்கீழ் ஈடு செய்தல் தன்மையையும் சமநிலையில் பேணுவதாகவும் கூறப்படுகின்றது.

மேற்பரப்பின் மீதான மலையின் வளர்ச்சியின் பிரதான காரணி உருவாக்கமோ அல்லது நிலத்தின் உயர்வோ அன்று. மலைத்தொடரின் கீழ்உந்துதல் விசையினை அளிக்கின்ற மிதக்கின்ற வளைவின் அதிகரிக்கின்ற இடமே பிரதான காரணியாக உருவாகின்றது. இது உப-புவியோட்டின் கீழ் செயற்படுகின்ற செயன்முறைகளின் நிகழ்வாக உருவாகின்றது.

0 கருத்துகள்: