, ,

இனவெறியின் வீழ்ச்சி எப்போது?

பிரிவு : அனுபவம்--> நிறவெறி

மௌரிடேனியாவில் 80.000 கருப்பர்கள் பெர்பெர் இனத்தவரின் அடிமை சொத்தாக இருக்கிறார்கள் என்று அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசு 1994-இல் எடுத்த கணக்கெடுப்பில் கூறி இருந்தது. அதிர்ச்சியான தகவல் தான். அதுவும் எண்ணிக்கை இன்னும் அதிகமாகவும் இருந்திருக்கலாம்.


மேலோட்டமான வரலாறுகளில் அடிமைகள் குறித்து வாசித்திருப்போம். அதெல்லாம் அந்த கால வரலாறு. இப்பதான் மனிதன் நல்லா தெளிவாக இருக்கிறானே என்று பேசிக் கொண்டிருந்த நமக்கெல்லாம் திடுக்கிடும் செய்தி.


பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளில் தனி மனிதர்களின் உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு மனிதர்களை மனிதர் இழிபடுத்துவது என்பது படுகேவலமானது என்று உலக வல்லரசு நாள் ஒன்றிணைந்து ஒழித்துக் கட்டியது.


பழைய கால வழக்கப்படி கறுப்பு இனத்தவர்களை வலை வீசி பிடிக்கும் வழக்கம் இப்போது இல்லை. கை கால்களில் சங்கிலி போட்டு சந்தையில் ஏலம் விட்டு விற்கும் வழக்கம் இல்லை. இருப்பினும் வேறு வேறு முறைகளில் அடிமை முறை தொடர்கிறது மானிட இனத்தில்...



கிரேக்கர்கள், ரோமானியர்கள், எகிப்து, அரபு நாடுகளில் அடிமை முறைகள் பல்வேறு முறையில் உபயோகிக்கப்பட்டனர். வரலாறுகளில் அடிமைகள் எப்படி வாழ்ந்தனர் என்பதை படித்தால் நெஞ்சி வெடித்துவிடும் குரூரங்கள் இருக்கும்.



நமக்கு மிக சமீபத்திய நூற்றாண்டான இருபதாம் நூற்றாண்டு வரலாற்றை படித்தால்கூட அதிர்ச்சிதான்.அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இருந்த கருப்பு மனிதர்கள் அடிமைமுறைக்கு எதிரான போராட்டத்தை தொடங்கிய போது உள்நாட்டு போரை உருவாக்கும் அளவிற்கு எழுச்சி கொண்டது.



என்ன செய்வது என்று முழித்துக் கொண்டிருந்த அமெரிக்கா ஐரோப்பாவுடன் தீவிர ஆலோசனை நடத்தி விட்டு அடிமைகள் மீது திணித்த அடக்கு முறையை சற்று தளர்த்தியது.



மௌரிடேனியாவில் கருப்பர்கள் அடிமையாக இருப்பதாக செய்தி வந்தது அல்லவா? அந்த கருப்பு மனிதர்களை வேலைகளுக்கும், காம இச்சைகளுக்கும் பயன்படுத்துவதாக செய்தியில் கூறப்பட்டிருந்தது.



அந்தச் செய்திதான் 'டிரம்' என்னும் நீக்ரோ இளைஞனை ஞாபகப்படுத்தியது.


'டிரம்' பற்றிய அறிமுகத்தை உங்களுக்கு சொல்வதென்றால்....

திடகாத்தமான, வலுள்ள, வீரமுள்ள கருப்பு இளைஞன் என்று சொன்னால் சாதாரண கருப்பு இளைஞர்களின் தோற்றமும் அப்படித்தானே என்று நீங்கள் நினைத்துவிடக் கூடும்.

'டிரம்' அப்படி இல்லை...


அமெரிக்காவில் அந்த காலத்தில் ஒரு வழக்கம் இருந்தது. அடிமைகளில் தரமான அடிமையை ஏகப்பட்ட விலைக்கு வாங்கி அந்த தரமான அடிமையை வைத்து 'தரமான நீக்ரோ'க்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் பழக்கம்.பணத்திற்காக இல்லை.



பொழுது போக்கிற்காகவும், தங்களிடம் தரமான அடிமைகள் இருக்கிறார்கள் என்பதை வெள்ளை முதலாளிகள் ஆணவத்துடனும் அகம்பாவத்துடனும் காட்டுவதற்கு....


அப்படிப்பட்ட தரமான நீக்ரோ தான் டிரம்!


வெள்ளை முதலாளியிடம் அடிமையாக இருந்த டிரம்மை பார்த்து முதலாளியின் வைப்பாட்டிக்கு ஒருமுறை சபலம் வந்துவிடவே டிரம்மிடம் தன் ஆசையை வெளிப்படுத்துகிறாள். டிரம் மறுத்தும் வற்புறுத்தி தன் ஆசையை தீர்த்துக் கொள்கிறாள். இதை பார்த்துவிட்ட முதலாளிக்கு கடும் அதிர்ச்சி.



"போயும்.. போயும்... ஒரு கருப்பனுடன் செக்ஸ் செய்துவிட்டாளே" என்ற வெறுப்பு. ஆசை நாயகியை வீட்டில் இருந்து துரத்திவிடுகிறான் முதலாளி.



டிரம்மை வேறு நீக்ரோ அடிமைகளை வைத்து அடித்தே சாகடிக்கிறான்.



விரட்டப்பட்ட பெண் வேறு ஊரில் நைட் க்ளப் நடத்தும் தொழில் ஆரம்பிக்கிறாள். சில மாதங்களில் தான் கர்ப்பமாக இருப்பது அவளுக்கு தெரிகிறது. பல ஆண்களுடன் தொடர்பு இருந்ததால் யாருடைய குழந்தை என்ற குழப்பம்.


குழந்தை பிறந்த போதுதான் அதிர்ந்தாள் தாய்.


கறுப்பு குழந்தை.



ஒரே ஒருமுறை நீக்ரோவுடன் இருந்ததற்காக பிறந்த கறுப்பு குழந்தையா என் குழந்தை என்று வெறுத்தாள்.



தாய் பாசம் என்பார்களே அதெல்லாம் நிறவெறிக்கு முன் நிற்காது போலும்...



குழந்தைக்கு பெயர் 'டிரம்சன்'



மற்றவர்களிடம் குழந்தை தன்னிடம் வேலை பார்த்த நீக்ரோவின் மகன். தனக்கு அடிமை தேவைப்பட்டதற்காக குழந்தையை விலைக்கு வாங்கினேன் என்று சமாளித்தாள்.


டிரம்சனை ஒழுங்காக கவனிக்கவில்லை தாய். வேறொரு பெண் குழந்தையை பராமரிக்கும் பொறுப்பை கவனித்துக் கொண்டாள்.


டிரம்சன் பெரியவனாகியதும் வெள்ளை தாயின் நைட் கிளப்பில் வேலை செய்கிறான். எஜமானி தான் தன் அம்மா என்பது குழந்தைக்கு தெரியாது.



தாயிக்கோ குழந்தையை பார்க்கும் போதெல்லாம் குமட்டிக் கொண்டு வந்தது. அவனுடைய நிறம் அவளை அறுவெறுப்பு அடைய வைக்கிறது. டிரம்சன் மீது வெறுப்பாக இருக்கிறாள்.



"எப்படி டிரம் உடன் செக்ஸ் செய்தேனோ" என்று தனக்குள் அறுவெறுப்புடன் நினைத்துக் கொள்கிறாள். டிரம்சனை வேலை நேரங்களில் கேவலமான முறையில் திட்டுவாள். நாயைப் போல் நடத்தினாள். கடுமையான வேலைகளை கொடுக்கிறாள்.



குழந்தையை பொறுத்தவரை அவளின் செயல்பாடுகளைக் கண்டு சராசரி வெள்ளை இனத்துப் பெண்ணின் இனவெறி உணர்வாக நினைக்க வைக்கிறது.



தன்னுடைய முதிய வயதில் மரணப்படுக்கையில் இருக்கும் போது டிரம்சனை அழைத்து உண்மையை சொல்கிறாள் தாய். ஒருமுறை, ஒரே ஒருமுறை மட்டும் 'அம்மா' என்று சொல்லும் அனுமதியை வழங்குகிறேன் என்றாளாம்.



நடந்த கதை.


கேட்க கேட்க ஆச்சரியமாக இருக்கிறது.

தாய்கும் குழந்தையும் உள்ள பாசம் என்பதைக் கூட நிறவெறி மாற்றிவிடுமா என்ன?


நிறவெறி உணர்வுகளை சட்டத்தினால் மாற்றிவிட முடியாது. அடிமை முறைகளையும் ஒழித்துகட்ட முடியாது. ஆளப்படுபவர்களும் ஆள்பவர்களும் இருக்கும் வரை. இதையும் தாண்டி முடியும் என்றால் 'மனித நேயம்' தேவை.



அது கிடைக்குமா இன்றைய காலத்தில்?

0 கருத்துகள்: