, ,

கேஸ்ட்ரோவைக் கொல்ல 638 வழிகள்

பிரிவு : சம்பவங்கள்--> கேஸ்ட்ரோ

கேஸ்ட்ரோவின் மெய்க்காவல் அலுவலகத்தில் முக்கிய கண்காணிப்பாளராக இருந்த எஸ்கலாண்டி என்பவர் கேஸ்ட்ரோவைக் குறித்து பல அதிர்ச்சிகரமான சுவாரசியமான தகவல்களை வெளியிட்டிருக்கிறார். அவற்றையெல்லாம் தொகுத்து இங்கிலாந்து தொலைக்காட்சி ஒன்று "கேஸ்ட்ரோவைக் கொல்ல 638 வழிகள்" என்ற தலைப்பில் செய்திப்படம் தயாரித்திருக்கிறது. ஏற்கனவே க்யூபா புரட்சியை பற்றி படிக்கும் பொழுதெல்லாம் பிரமிக்க வைக்கும் புரட்சியாளர்களான் டாக்டராக இருந்த 'சே குவாரா', வக்கீலாக இருந்த 'பிடல் கேஸ்ட்ரோ' என இருவரின் சாகஸ செயல்களைக் கண்டு பிரமிக்கும் நமக்கு அவர்களின் வாழ்க்கையில் நடந்த பல சதி திட்டங்களையும் எப்படி முறியடித்தார்கள் என்பதையும் பார்க்கும் போது மலைப்பாக இருக்கிறது. ஒருகட்டத்தில் சே குவாராவை அமெரிக்க உளவு படை [Central Intelligence Agency - C.I.A] கொன்றதும், கேஸ்ட்ரோவைக் காப்பாற்ற அவரின் மெய்க்காவலர்கள் எடுத்துக் கொண்ட பெரும் முயற்சிகளையும் குறித்து இச்செய்தி படம் விவரிக்கிறது.

புகைப்பிடிக்கும் வழக்கம் உடைய கேஸ்ட்ரோவின் விருப்பத்தை அறிந்த அமெரிக்க உளவு நிறுவனம் ஒருமுறை சிகார் ஒன்றில் வெடிமருந்து கலவை கலந்து அனுப்பியதையும், மற்றொரு முறை கடலில் மூழ்கி நண்டுகள் சேகரிப்பது கேஸ்ட்ரோவின் பொழுது போக்கு என்பதையும் கண்டுபிடித்த அமெரிக்க உளவு நிறுவனம் போலியாக நண்டுபோல் செயற்கையாக செய்யப்பட்ட நண்டுக்குள் பவரான வெடிமருந்துக்களை அதற்குள் வைத்து கேஸ்ட்ரோ குளிக்கச் செல்லும் க்யூபா கடற்கரையில் போட்டு வைத்ததையும், அதை தொட்டால் வெடிக்கும்படி திட்டம் இருந்ததாக எஸ்கலாண்டி கூறியதும் அச்செய்திப்படத்தில் உள்ளது.

இதற்கு அமெரிக்கா அப்படியொரு திட்டம் தீட்டியது உண்மைதான் என்றும், ஆனால் கடைசி நேரத்தில் அத்திட்டம் கைவிடப்பட்டதாகவும் மறுப்பு தெரிவித்தது. இன்னொரு முறை உடலில் தொடர்ந்து அரிப்பை ஏற்படுத்தக் கூடியதும் செயலில் முழுக் கவனம் செலுத்த முடியாத அளவுக்கு அரிப்பை ஏற்படுத்தக் கூடியதுமான கண்ணுக்குத் தெரியாத ஒருவகை பூஞ்சானை கேஸ்ட்ரோவின் நீச்சல் உடையில் தூவி கேஸ்ட்ரோவுக்கு கொடுக்க முயன்றதாகவும் அம்முயற்சியும் தோல்வி அடைந்ததாக எஸ்கலாண்டி கூறுகிறார்.

சாப்பாட்டில் விஷம், உடையில் சதி, நடக்க அடியெடுத்து வைத்தால் வெடி, பார்த்தால் கதிர்வீச்சி என எத்தனையெத்தனை கொலைத் திட்டங்கள். எத்தனை நாட்கள் தான் தாக்குப்பிடிக்க முடியும்? அடப்பாவிங்களா ஒரு மனிஷனை இப்படியெல்லாமா கொலைவெறியோடு துரத்துவார்கள்? இவ்வளவு தாய்ச்சல் நடந்தால் மனுஷனுக்கு பைத்தியம் பிடிக்காதா? இருக்கிறதை விட நாமே செத்து ஒழிவோம்னு நினைக்க வராதா?ஒரு கட்டத்தில் புரட்சியாளர்களுக்கு வெறுத்துப் போகாதா? என நாம் நினைக்க ஆரம்பிப்பதற்குள் அந்தக் கதையையும் சொல்லுகிறார் எஸ்கலாண்டி.

தொடர்ச்சியான கொலை முயற்சியில் ஒருமுறை கேஸ்ட்ரோவுக்கு உணவாக கொடுக்கப்பட்ட நத்தை வகை உணவுக்குள் வெடிபொருளை வைத்து கொல்ல முயன்றது, மாத்திரைகளில் நஞ்சு கலந்து கொல்ல முயன்றது, சில கூலிப்படைகளை அனுப்பியும் கொல்ல முயன்றது போன்ற கொலைத் திட்டங்கள் தொடர்ந்து நடந்துக் கொண்டிருந்தபோது கேஸ்ட்டிரோ வெறுப்புற்று தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துக் கொள்ள முயன்றார். அப்போது சிறுகுடலில் இருந்து இரத்தப்போக்கு ஏற்பட்டது. கேஸ்ட்ரோவைக் காப்பாற்றுவதற்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கே மேலும் சிலநாட்கள் ஓய்வெடுக்கவும், கேஸ்ட்ரோவின் உடலைக் பரிசோதிக்கவும் தங்க நேரிட்டது. அப்போது கூட கேஸ்ட்ரோவை கொல்ல முயற்சி எடுக்கப்பட்டதாக எஸ்கலாண்டி தெரிவிக்கிறார்.

கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகள் இப்படி கொலை முயற்சிகள் இம்முயற்சி நீடித்ததாகவும் கூறுகிறார். 1959- இல் க்யூபா புரட்சி வெற்றி பெற்று கேஸ்ட்ரோ அதிபர் ஆனபின் கேஸ்ட்ரோவையும் அவருடைய தம்பியான ராவூல் மற்றும் புரட்சியாளரான சே குவாராவையும் கொல்ல தீவிரமாக அமெரிக்கா திட்டமிட்டதாக சொல்கிறார் எஸ்கலாண்டி.பேனாவை வெடிக்கச் செய்வது, முகத்தில் போடும் க்ரீமில் நஞ்சு கலந்த முயற்சிகள் கண்டுபிடிக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டுகிறார்.

எத்தனை முறை தோல்வி அடைந்தாலும் சி.அய்.ஏ [Central Intelligence Agency - C.I.A] விடாது தொடர்ந்து கொண்டே இருந்திருக்கிறது. கைக்குட்டைகள், டீ தூள்கள், காப்பி தூள்களில் கூட நஞ்சுவை கலந்து வைத்திருக்கிறது. 2000- ஆம் ஆண்டில் கேஸ்ட்ரோ பனாமா நாட்டிற்கு செல்ல திட்டமிட்டிருந்தபோது அதை தெரிந்து கொண்ட சி.அய்.ஏ அமெரிக்க உளவு நிறுவனம் கேஸ்ட்ரோ பேசுவதற்காக அமைக்கப்பட்டிருந்த மேடையின் அடியில் 90 கிலோ எடையுள்ள சக்தி வாய்ந்த வெடிகுண்டை புதைத்து வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது. இப்படி ஏகப்பட்ட கொலை திட்டங்கள் செயல்படுத்திக் கொண்டே இருப்பதால் கேஸ்ட்ரோவின் வாழ்க்கை முறைகள் மிகுந்த கண்காணிப்பிற்குள்ளதாக எஸ்கலாண்டி செய்தி படத்தில் தெரிவித்திருக்கிறார்.

0 கருத்துகள்: