, ,

ஆத்மா என்பது என்ன

பிரிவு : தத்துவங்கள்--> சாக்ரடீஸ்

மனிதனுக்கு ஆத்மா என்று ஒரு பொருள் உண்டு என்ற கருத்தை முதன் முதலில் சொல்லியவர் சாக்ரடீஸ். ஒவ்வொரு மனிதப்பிறவியின் உயிரிலும் இந்த ஆத்மா குடி கொண்டிருக்கின்றது. விழித்திருக்கும் வேளையில் அவனுடைய அறிவும், நன்னெறி என்னும் ஒழுக்க உணர்வும் ஆன்மாவில் இருந்தே செயல்படுகின்றது. எனவே ஆன்மா தான் மனிதன் வாழ்வின் முக்கிய அலுவல், அந்த ஆன்மாவைப் போற்றிக்காப்பது தான். இதுவே சாக்ரடீசின் கோட்பாடு.

பின்னாலில் கிறிஸ்து வசமயம் மனிதனுள் இருக்கும் ஆன்மாவை ஒப்புக் கொண்டு சமயத்தத்துவங்கள் எல்லாவற்றையும் ஆத்மா அடிப்படை மீது அமைத்தது. மனிதன் உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் போது அவனுக்கு ஏற்படுகிற கனவு "மருள்" உருவெளித்தோற்றம், "சமாதி" அனுபவம் முதலானவற்றுக்குக் காரணம் ஸை[க்]கி [Psyche] என்று சாக்ரடீஸ் காலத்தில் ஒரு கருத்து நிலவி வந்தது.

அந்த ஸை[க்]கியின் தூண்டுதல் காரணமாக மனிதன் பல சமயங்களில் பிடித்தமில்லாத செயல்களில் இறங்கி விடுவதுண்டு. மனிதனின் கடமைப்பற்றி அந்தக்காலத்தில் என்ன கருத்து நிலவியது என்றால் கடவுள்களுக்கு தவறாமல் பூஜைகள் செய்வதும், வாழ்க்கையில் சத்தியத்தை கடைப்பிடித்த ஸை[க்]கியானது தனது பழைய அமர நிலை அடைய அனைத்து முயற்சிகளையும் அக்கறையோடு செய்வதே மாந்தர் கடமை என்று சொல்லி வந்தார்கள்.

மனிதன் நல்லவனா? தீயவனா? அறிவாளியா? ஞானமற்றவனா? என்று தீர்மானிப்பதில் ஸை[க்]கி எவ்விதத் தொடர்பும் கொண்டிருக்கவில்லை. ஆனால் சாக்ரடீஸ் ஞானத்திற்கும், நல்லொழுக்கத்திற்கும் ஊற்றுக்கண் என்று சொல்லி சாக்ரடீஸ் கொள்கை, கோட்பாடு ஒருமகத்தான புரட்சியை உருவாக்கிவிட்டது. தனிமனித ஒழுக்கத்திற்கும், அறிவுக்கும் ஒரு மனிதனின் வாழ்க்கைத் திட்டத்தில் அதிமுக்கியத்துவத்தை அமைத்துக் கொடுத்தார் சாக்ரடீஸ்.

ஸை[க்]கியின் அமர தெய்வீகத்தன்மையும், மனிதன் சுயசிந்தனை மூலம் வளர்த்துக் கொள்ளும் ஞானமும், நல்லற ஒழுக்க உணர்வும் ஒன்று கலந்து ஆன்மா என்ற புதிய கருத்து உருவாகியது. சாவினால் ஏற்படும் உடல் அழிவைப் பெரிதுபடுத்த வேண்டியதில்லை. ஆன்மாவுக்கு எவ்வித கேடும் நேராமல் தற்காத்துக் கொள்வதே சிறந்த வாழ்க்கை முறை என்றார் சாக்ரடீஸ்.

அறிவு பூர்வமான [காரணகாரிய ரீதியிலான] சிந்தனையும், அறிவுக்கு ஒத்துவருகிற நன்னடத்தையும் ஆன்மாவைப் பாதுகாக்கின்றன. மனிதனின் உள்ளத்தில் உறைகின்ற ஆன்மாவின் குரலுக்குச் செவிசாக்காமல் முறைக்கேடாக நடப்பதால் ஆன்ம நட்டம் ஏற்படுகின்றது. மனிதச் செயற்பாடுகளெல்லாம் நல்லறிவின் அடிப்படையில் நிகழவேண்டும். [அவிச்சை, அவித்யா] அறியாமையின் அடிப்படையில் அமையக்கூடாது என்று முடிவு செய்தார் சாக்ரடீஸ்.

சாதாரண மனிதர்களிடம் இருந்த அறியாமையை ஒழித்துக் கட்டுவதற்காக கேள்விக் கணைகளைத் தொடுத்து குறுக்கு விசாரணை செய்து முடிவில் உண்மையை திரட்டிக் காட்டினார் சாக்ரடீஸ். சாக்ரடீஸ் குறிக்கும் ஆன்மா என்ற [Soul] இன்று நாம் சொல்லும் மனத்தத்துவமல்ல, மனத்தத்துவஞ் சார்ந்த உடலுமல்ல.

ஆன்மா என்பது இன்னது என்று சாக்ரடீஸ் விளக்கவில்லை. ஆன்மா மனிதனுள் இருக்கின்றது. கண், மூக்கு, செவி ஆகிய ஜம்புலன்களுக்கு எட்டாதது என்று மட்டுமே குறிப்பிடுகின்றார். ஒருமுறை சாக்ரடீஸிடம் ஆன்மாவின் தொழில் என்ன என்று கேட்ட போது பகுத்துணருதலே ஆன்மாவின் தொழில் என்கிறார். பொருள்களின் தன்மையை உள்ளது உள்ளவாறே உணருதல். திது எது? நல்லது எது? என்று பகுத்துப்பார்த்தல். அவ்வாறு பகுத்துணர்ந்து மனிதனின் செயற்பாடுகளை நெறிப்படுத்தும் போது மனிதனின் வாழ்க்கையில் நன்மை வருகின்றது. தீமை ஒழிகின்றது அறியாமை அகல்கிறது என்றார்.

மற்றொரு கேள்வி சாக்ரடிஸிடம் கேட்கப்பட்டது. ஆன்மாவைப் பரிசுத்தமாக்குவது என்றால் என்ன? உலக வாழ்வு பற்றி உண்மையறிவைப் பெறுதலும், அந்த அறிவின் அடிப்படையில் நல்லொழுக்க அறத்தைக் கடைப்பிடித்து வாழ்தலுமே ஆன்ம பரிசுத்தத்திற்குரிய சாதனங்கள். போலி ஞானமும், போலி ஞான அடிப்படையில் இயலும் போலி ஒழுக்கமும் ஆன்மாவைக் கெடுத்துவிடுகின்றன. அதனால் உலக வாழ்க்கையும் நிலைகுலைந்து போகின்றது என்றார். இதுவே சாக்ரடீசின் ஆத்மபோதனை.

இந்தக் கோட்பாட்டில் அறிவியலும் [Science], அறஇயலும் [Ethics] இன்று செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றது.

0 கருத்துகள்: