, ,

தொழிலாளர் சட்டங்கள்

தொழிலாளர் சட்டங்கள் குறித்த பகுதி நேர பட்டயப் படிப்பு துவக்கம்


சென்னை: பெரிய நிறுவனங்களில் மனித வளத் துறையில் வேலைவாய்ப்பு பெற உதவும் தொழிலாளர் சட்டங்கள் குறித்த பகுதி நேர பட்டயப் படிப்பு துவக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு: 

தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம், தமிழ்நாடு அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தன்னாட்சி பெற்ற கல்வி நிறுவனமாகும். இக்கல்வி நிலையத்தில் ஏற்கனவே தொழிலாளர் மேலாண்மையில் பட்டப்படிப்புகள் மற்றும் பட்டயப்படிப்பு நடத்தப்பட்டு வருகிறது. இக்கல்வியாண்டிலிருந்து “தொழிலாளர் சட்டங்களும் நிர்வாகவியல் சட்டமும்” என்ற ஓராண்டு பகுதி நேர பட்டயப் படிப்பு துவக்கப்படவுள்ளது. 

இதை தமிழக முதல்வர் அவர்கள் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்கள். இதற்கான அரசு ஆணையும் பெறப்பட்டுள்ளது. ஏதாவதொரு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் இப்படிப்பில் சேரலாம். 

இப்பட்டயப் படிப்புக்கான வகுப்புகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் நடத்தப்படும். இப்பட்டயப்படிப்புக்கான விண்ணப்பங்கள் தற்போது இக்கல்வி நிலையத்தில் வழங்கப்பட்டு வருகின்றன. விண்ணப்பிக்க கடைசி நாள் 22.07.2013 ஆகும். மேலும் விவரங்களுக்கு இயக்குநர், தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம், எண்.5 காமராசர் சாலை, சென்னை- 5 (மெரினா கடற்கரை விவேகானந்தர் இல்லம் அருகில்), தொலைபேசி எண்கள் - 044 -28440102 / 28445778 தொடர்பு கொள்ளலாம்.

விண்ணப்பம் ரூ. 200/-. SC/ST பிரிவினருக்கு ரூ.100/- (சாதிச்சான்றிதழின் நகல் தர வேண்டும்.)

0 கருத்துகள்: