, ,

அகதிகள்

உலக அளவில் அகதிகள் எண்ணிக்கை அதிகரிப்பு!

இன்று - ஜூன் 20: உலக அகதி தினம்


அகதி... தமிழர்களுக்கு இந்தச் சொல்லின் அர்த்தம் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. இலங்கைத் தமிழ் உறவுகளின் பாதிப்புகளால் மிகவும் நெருக்கமானதுதான் இந்தச் சொல். 

உலகம் முழுவதும் கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 80 லட்சம் பேர் புதிதாக அகதிகளாக்கப்பட்டவர்கள் என்கிறத் தகவல் இப்போது நம்மை எட்டியிருக்கிறது. 

குறிப்பாக, தம் இருப்பிடங்களைவிட்டு வலுக்காட்டாயமாகத் தப்பி ஓடச்செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான அமைப்பு கூறியுள்ளது.

ருவண்டா மற்றும் முன்னாள் யூகோஸ்லாவிய நெருக்கடி காலகட்டத்துக்குப் பிறகு, இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துக் காணப்படும் காலமும் இதுவே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் இடம்பெயர்ந்த 80 லட்சம் பேரில் பெரும்பாலானோர் போர் காரணமாகவே இடம்பெயர்ந்தனர்.

இது மிகவும் மோசமான நிலைமை. சிரியாவின் மோதல் காரணமாகவே மிகவும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர் என்று ஐ.நா. சுட்டிக்காட்டியுள்ளது. 

தற்போதைய நிலையில், உலக அளவில் உள்ள 4.5 கோடி அகதிகளில் பாதி எண்ணிக்கையிலானோர் ஆப்கானிஸ்தான், சோமாலியா, ஈராக், சிரியா மற்றும் சுடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று ஐ.நா.வின் ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

நீண்ட கால மோதல்களை தீர்க்க முடியாததும், புதிய மோதல்கள் உருவாவதை தடுக்க முடியாததும் சர்வதேச சமூகத்தின் இயலாமையையே காட்டுகின்றன.

0 கருத்துகள்: